Home » » மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 16 தற்காலிக கோபுரங்கள்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 16 தற்காலிக கோபுரங்கள்

Written By Unknown on Wednesday, 10 April 2013 | 07:04



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் 23-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண 6500 பேருக்கு இலவச அனுமதியும், 6 ஆயிரம் பேருக்கு கட்டண சீட்டும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாப்பு கருதி போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

திருமணத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தவும், பாதுகாக்கவும் சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் 16 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் திருக்கல்யாணத்தன்று வாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாசி வீதிகளிலும், அனுமதி பெற்ற சிறப்பு விருந்தினர்களின் வாகனங்கள் மூல வீதிகளிலும் நிறுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் நடந்தது. இதில் துணை கமிஷனர்கள் திருநாவுக்கரசு, பெரோஸ்கான் அப்துல்லா உள்பட பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment