Home » » விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

Written By Unknown on Tuesday, 14 May 2013 | 23:42

13/05/2013
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் டிராவிட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி-முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது.

40 பந்துகளைச் சந்தித்த ஹசி 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பந்துவீச்சில் போல்டானார். பின்னர் வந்த ரெய்னா 1, கேப்டன் தோனி 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார்.

மறுமுனையில் 49 பந்துகளில் அரைசதம் கண்ட முரளி விஜய், 50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். முன்னதாக விஜய் 46 ரன்களில் ரன் அவுட்டில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. கடைசிக் கட்டத்தில் பிராவோ 11 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுக்க, சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் தரப்பில் கெவன் கூப்பர் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானே 9, பாக்னர் 1, சாம்சன் 0, திராவிட் 22 ரன்களில் வெளியேற, 9.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறியது ராஜஸ்தான்.

0 comments:

Post a Comment