Home » » அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்

அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்

Written By Unknown on Wednesday 19 June 2013 | 21:38

மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக 2 காவலாளிகளிடம் போலீர் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினர்.
      அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை காலையில் பொம்மன்பட்டியைச் சேர்ந்த பெண்ணின் ஆண் குழந்தை மர்மப் பெண்ணால் கடத்தப்பட்டது. அப் பெண்ணின் உருவம் கண்காணிப்புக் காமிராவில் பதிவாகிய போதும், முகத்தை அடையாளம் காண முடியவில்லை.
      கடத்தல் தொடர்பாக, மருத்துவமனை மற்றும் மதிச்சியம் போலீஸ்  இணைந்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் துணி விற்று வந்த பெண், அவரது கணவரிடம் விசாரணை நடந்துவரும் நிலையில், குழந்தை கடத்தப்பட்ட வார்டில் காவலுக்கு இருந்ததாகக் கூறப்படும் தாற்காலிக காவலாளிகள் 2 பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது. செல்லூரைச் சேர்ந்த காவலாளியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
      வார்டில் இருந்த செவிலியர்கள், பயிற்சி செவிலிய மாணவியரிடமும் காவல்துறையினர்    விசாரணை மேற்கொண்டனர்.
   எனினும் குழந்தை குறித்து தகவல் பெறுவதில் முன்னேற்றம் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
      தரமற்ற சாதனங்கள்:  மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட காமிரா அடையாளம் காணமுடியாத வகையில் தரமற்று இருப்பது போலீரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அரசு மருத்துவமனையில் காமிரா தரமற்று அமைத்திருப்பது குறித்து உயரதிகாரிகள்  விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மூத்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

0 comments:

Post a Comment