Home » » குடிநீர் குழாய் இணைப்புக்கு அதிக பணம் கேட்பதாக ஆர்ப்பாட்டம்

குடிநீர் குழாய் இணைப்புக்கு அதிக பணம் கேட்பதாக ஆர்ப்பாட்டம்

Written By Unknown on Wednesday 19 June 2013 | 21:45



மாநகராட்சி 45 ஆவது வார்டு அண்ணா வீதி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புக்கு கூடுதல் பணம் கேட்பதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மைய அலுவலகம் முன்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     அரசியல் ரீதியாக சிலர் பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக, அந்த வார்டு கவுன்சிலர் அபுதாகிர் மறுப்பு தெரிவித்தார்.

     கே.புதூர் அண்ணா வீதி பகுதியில், புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், புதிய இணைப்பு பெறுவோரிடம் மாநகராட்சி கட்டணத்தைவிட, மாமன்ற உறுப்பினர் பெயரைச் சொல்லி சிலர் கூடுதல் பணம் கேட்பதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை கே. புதூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். செவ்வாய்க்கிழமை இதே புகாரைக் கூறியும், நடவடிக்கை எடுக்கக்  கோரியும் வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி மைய அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக்  கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

 இந்தப் புகார் குறித்து மறுப்பு தெரிவித்து, வார்டு மாமன்ற உறுப்பினர் அபுதாகிர் செவ்வாய்க்கிழமை தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், பொதுமக்கள் புதிய குடிநீர்க் குழாய் இணைப்புக்கு, தேவையில்லாமல் தனிநபர்களை அணுகினால் ரூ.6 ஆயிரம் வரை வசூலிப்பதாக புகார் இருப்பதால், அவர்களை அணுக வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளேன். அத்துடன், இதில் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. இந்த விவரங்கள் தெரிந்தும், திமுகவைச் சேர்ந்த சிலரது தூண்டுதலின் பேரில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

1 comments:

  1. Play Free Online Slots | SEGATIC PLAY
    At SEGATIC PLAY, we offer you the chance to 제왕카지노 play over 100 of the most popular slots, video poker, 샌즈카지노 blackjack, roulette, keno and choegocasino more.

    ReplyDelete