Home » » மதுரை ரெயில் நிலையத்தில் மர்ம சாக்கு மூட்டையால் ஏற்பட்ட பரபரப்பு

மதுரை ரெயில் நிலையத்தில் மர்ம சாக்கு மூட்டையால் ஏற்பட்ட பரபரப்பு

Written By Unknown on Wednesday, 10 April 2013 | 06:58



மதுரை ரெயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த மர்ம சாக்கு மூட்டையால் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் இன்று மர்மமான முறையில் சாக்கு மூடை ஒன்று கிடந்தது.

4-வது பிளாட்பாரத்தில் ரெயில்கள் அதிகமாக வராது. பாசஞ்சர் ரெயில்கள் மட்டுமே அவ்வப்போது வந்து செல்லும். அதனால் பயணிகள் கூட்டமும் குறைவாக இருக்கும். இந்நிலையில் தண்டவாளத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது அந்த வழியே சென்ற பயணிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ரெயில்வே போலீசுக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது சாக்கு மூட்டையில் வெள்ளரி பிஞ்சுகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட 3 மணி நேர பரபரப்புக்கு முடிவு கிடைத்தது.

வெளி மாவட்டத்தில் இருந்து சாக்கு மூடையில் வெள்ளரி பிஞ்சுகளை எடுத்து செல்லும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment