Home » » பாமக அதிக வளர்ச்சி அடைந்துள்ளது: ஜி.கே.மணி

பாமக அதிக வளர்ச்சி அடைந்துள்ளது: ஜி.கே.மணி

Written By Unknown on Friday 21 June 2013 | 20:58

பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளால் வன்னியர் இடையே ஆத்திரமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதோடு அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக கட்சித் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
 வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள ஜி.கே.மணி, மாமல்லபுரம் காவல்நிலையத்தில் ஆஜராகி பதிவேட்டில் திங்கள்கிழமை கையெழுத்திட வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 மாநிலங்களவைத் தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து சென்னையில் 21-ஆம் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
 வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு வந்த கட்சியினர் மீது சிலர் தாக்குதல் நடத்தி பஸ்களை சேதப்படுத்தினர். ஆனால் பாமக.வினர் மீது போலீஸார் பழிசுமத்தி, அதன் தொடர்ச்சியாக 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், 32 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 9 ஆயிரம் பேர் மீது பல்வேறு வழக்குகளில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 பாமக.வினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளால் வன்னியர்கள் இடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அண்மைக்காலங்களில் கட்சி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.

 பேட்டியின்போது கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் பி.வி.கே.வாசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் காரணை ராதா, மாமல்லபுரம் நகர செயலாளர் எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment