Home » » மருத்துவருக்கு உதவும் மனப்பான்மை அவசியம்-மதுரை ஆட்சியர் கருத்து

மருத்துவருக்கு உதவும் மனப்பான்மை அவசியம்-மதுரை ஆட்சியர் கருத்து

Written By Unknown on Friday 21 June 2013 | 21:17


Photo Gallery
மருத்துவர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம் என மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா வலியுறுத்தினார். மதுரை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீருக்கான சாதனம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் புதன்கிழமை அவர் பேசியதாவது:
  மாணவ சமுதாயம் ஊழலற்ற நிலையை உருவாக்க வேண்டியது அவசியம். மருத்துவர்களாகி கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவை புரிய வேண்டும். மருத்துவர்கள் என்பதைவிட மனிதாபிமானம் உள்ளவர்களாகச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம். சேவை மனப்பான்மையில் சிறந்து விளங்க வேண்டும்  என இப்போதே உறுதிபூண வேண்டும்.
  அரசு மருத்துவமனைகளில் விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் மருத்துவர்கள் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். அப்போதுதான் சமூக முன்னேற்றம் ஏற்படும் என்றார்.
  முன்னதாக அவர் ரூ.5 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விடுதி சமையல் அறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சாதனத்தைப் பார்வையிட்டார். ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தையும், ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட  தொலைக்காட்சிப் பெட்டி அறையையும் திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சிக்கு மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் என். மோகன் தலைமை வகித்தார். விடுதி மூத்த வார்டன் டாக்டர் சங்குமணி வரவேற்றார்.  கல்லூரி துணை முதல்வர் ஜெயராஜ், தேசிய மாணவர் படை அதிகாரி  சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment