யுகாதி திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தமிழ்நாடு ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
'யுகாதி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் இவ்வேளையில், தங்களுக்கும், தங்கள் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை அளிக்க வாழ்த்துகிறேன்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் தொலைபேசியில் ஆளுநர் ரோசய்யாவை, முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பு கொண்டு யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார். அப்போது, தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு, கவர்னர் ரோசய்யா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
0 comments:
Post a Comment