15/05/2013
|
மகாசேன் புயலில் சின்னாபின்னமான மியான்மர்! - பலர் பலி! |
வங்கக்
கடலில் நிலை கொண்டிருந்த மகசேன் புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர்
நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை புயல் தாக்கும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பாக்டாவ் நகர் அருகே ரோகிங்யா முஸ்லிம்கள் 100 பேருடன் சென்ற படகு, பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
0 comments:
Post a Comment