மதுரையில் தம்பதியை பிரிப்பதற்காக, ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியஇருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முத்துக்குமார் என்பவர், மதுரை மேலபொன்னரகத்தில் வசிப்பவர். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு ஒரு ஆபாச எஸ்எம்எஸ் வந்தது.அதில் முத்துக்குமாருக்கும், அவரது நண்பரின் மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்து.முத்துக்குமாரின் மனைவி, அதை படித்ததைத் தொடர்ந்து, கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் மனம் நொந்த முத்துகுமார்,மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.விசாரணையில் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கரிமேடு பகுதியைச்சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் சேர்ந்துதான் முத்துக்குமாரின் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து கரிமேடு போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment