Home » » மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் புரோக்கர்களின் தொல்லை.

மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் புரோக்கர்களின் தொல்லை.

Written By Unknown on Monday, 20 May 2013 | 08:35

மதுரை அரசு மருத்துவமனையில் நிகழும் இறப்பை வைத்து, பணம் பறிக்கும் கும்பல், சுதந்திரமாக நடமாடுகிறது. இது குறித்து நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததால் நோயாளிகளின் உறவினர்கள் பெருத்த அவதிக்குள்ளாகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கும் நோயாளிகளை எடுத்துச் செல்வதற்காக  இலவச அமரர் ஊர்தி "ஏசி' வசதியுடன் உள்ளது.ஆனால் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களும், 15க்கும் மேற்பட்ட புரோக்கர்களும் மருத்துவமனையில் உலா வருகின்றனர். இவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் பிரேதத்தை "அமரர் ஊர்தியில் ஏற்றினால், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்,'என்று கூறி பயமுறுத்தி, தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றி விடுகின்றனர்.
புரோக்கர்கள் இதற்கு  ரூபாய் 100க்கு ரூ.15 வீதம், தனியாக கமிஷனும் பெறுகின்றனர். இத்தகைய செயலுக்கு இலவச ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலரும் உடந்தை.பணவசதி இல்லாதவர்கள் இலவச அமரர் ஊர்தியை அழைத்தால், "ஏசி' இயங்கவில்லை, என பொய்யான தகவலை சொல்கின்றனர். மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 20 பேர் வரை சிகிச்சை பாலன் இன்றி , இறக்கின்றனர். ஆனால், இதுபோன்று நோயாளிகளின் இறப்பை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கட்டுப்படுத்த நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் மோகன் கூறுகையில்: பிரேத பரிசோதனை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் இதுபோன்று புரோக்கர்கள் தொல்லை இருப்பதாக வந்த புகாரின்பேரில். ஆறு புரோக்கர்கள் பிடிப்பட்டனர்.மேலும் போலீஸ் ஒத்துழைப்பு இருந்தால், இது போன்ற பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் மருத்துவமனையை சீர்படுத்த முடியும்என கூறினார்.

0 comments:

Post a Comment