சமூக வலைத்தளமான பேஸ்புக் கில் பெண்ணின் படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டது தொடர்பாக கல்லூரி பேராசிரியர் மற்றும்ஐடிஐ மாணவர் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது போட்டோவை ‘பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். சில நாட்களில் அந்த போட்டோவில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு தவறாக சித்தரித்து2 நபர்கள் வெளியிட்டிருந்தனர்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக மதுரை எஸ்பி பாலகிருஷ்ணனிடம் இது குறித்து புகார் அளித்தார்.இதனைத்தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் தர்மபுரியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ஆனந்த்(28) என்பவரும்,அதே பகுதியை சேர்ந்த தனியார் ஐடிஐ மாணவர் வெள்ளிமணி(22) என்பவரும்தான் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணையில் அவர்களிடம் இருந்து 15 சிம்
கார்டுகள் கைப்பற்றப்பட்டன.அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி செல்போனில்
தொடர்பு கொண்டு பல பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததும்
தெரியவந்தது.இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment