07/05/2013
|
|
எல்லையில் அமைதியை நிலைநாட்டவே படைகளை வாபஸ் பெற்றோம்! - சீனா! | |
இந்தியாவில்
லடாக் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் 19 கி.மீ. தூரத்துக்கு ஊடுருவி
கூடாரங்களை அமைத்தனர். இதனால் இந்திய - சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இந்தப் பிரச்னை தொடர்பாக சுமார் 3 வார காலமாக இரு தரப்புக்கும் பேச்சு
நடைபெற்றது. இந்நிலையில் எல்லையில் இருந்து இரு தரப்பும் ஞாயிற்றுக்கிழமை
படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டன.
சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூங்யிங், தலைநகர்
பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து அவர் கூறியது: பிரச்னைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்தியாவும், சீனாவும் இணைந்து எடுத்த முடிவு இது. இரு தரப்புக்கும் இடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம். இதனை மனதில் கொண்டும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும் எல்லையில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார். அப்போது எல்லையில் இருந்து வெகுதூரம் பின்வாங்குவதால் பிரச்னைகள் ஏற்படாதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இரு தரப்பும் ஒரே நேரத்தில் படைகளை வாபஸ் பெற்றுள்ளன. எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியாவுடன் எப்போதுமே நல்ல தகவல் தொடர்பு உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் பெறுவதால் பிரச்னை ஏற்படும் என்ற உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. எனினும் இது இந்தியாவுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு சாதகமான முயற்சி. இரு தரப்புமே அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்கும் என்றார் சூங்யிங். |
|
|
0 comments:
Post a Comment