மதுரையில் உள்ள தெற்கு மற்றும்வடக்கு தாலுகாக்களை பிரித்து புதிதாக 3 தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலூர், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி என 7 தாலுகாக்கள் மதுரை மாவட்டத்தில்உள்ளன. இதில், மதுரை தெற்கு தாலுகாவில் 14 லட்சம் பேரும், வடக்கு தாலுகாவில் 10 லட்சம் பேரும் வசித்துவருகின்றனர். மதுரை மாவட்டத்தில் இந்த 2 தாலுகாக்கள் மட்டும் பெரியவை.இந்நிலையில், மதுரை தெற்கு தாலுகாவை மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் என மூன்று தாலுகாவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மதுரை வடக்கு தாலுகாவை, மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா, இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை தெற்கு தாலுகாவில் மதுரை கிழக்கு, அவனியாபுரம், விராதனூர் என மூன்று பிர்காக்கள் மற்றும், மதுரை மேற்கு தாலுகாவில் மதுரை மேற்கு, நாகமலைபுதுக்கோட்டையும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் திருப்பரங்குன்றம், வலையங்குளம் என தலா இரண்டு பிர்காக்கள் வீதமும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரை கிழக்கு தாலுகாவில் அரும்பனூர், ஒத்தக்கடை, கூளப்பாண்டி, சக்கிமங்கலம், ராஜாக்கூர் குன்னத்தூர் மற்றும்சாத்தமங்கலம் ஆகிய 7 பிர்காக்களும், மதுரை வடக்கு தாலுகாவில் கள்ளந்திரி, சத்திரப்பட்டி, குலமங்கலம், அப்பன்திருப்பதி, சமயநல்லூர் என 5 பிர்காக்களும் பிரிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் முன்பு இருந்த7 தாலுகாக்கள் மற்றும் தற்போது உருவாக்கப்பட்ட3 புதிய தாலுகாக்களையும்சேர்த்து மொத்தம்10 தாலுகாவாக உயர்ந்துள்ளது. இதனால், புதிதாக6 தாசில்தார்கள், 9 துணை தாசில்தார்கள் பணியிடம் உருவாக்கப்படுவதோடு, வருவாய்த்துறையில் பதவி உயர்வு விரைவில் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
0 comments:
Post a Comment