Home » » ஸ்ரீ லெஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம்

ஸ்ரீ லெஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம்

Written By Unknown on Friday, 31 May 2013 | 21:28

 

மணி நகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஸ்ரீ லெஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது .
     ஸ்ரீ நரசிம்ம அவதாரநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மதுரை இஸ்கான் தலைவர் சங்கதாரிதாஸ் நரசிம்மர் கொடிக்கு விசேஷ பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தார்.
     பின்னர், 9 கலசங்களில் விசேஷ தீர்த்தங்கள் மூலம் பூஜை செய்யப்பட்டு, பால், பழம், பன்னீர், இளநீர் போன்ற பலவகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மேலும் புஷ்ப அபிஷேகமும் நடைபெற்றது.
     தொடர்ந்து பூர்ண கும்ப ஆரத்தியுடன் மஹா ஆரத்தி நடைபெற்றது.
  நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment