Home » , » ஜெயம் ரவியுடன் இணையும் ஜெயம் ராஜா

ஜெயம் ரவியுடன் இணையும் ஜெயம் ராஜா

Written By Unknown on Friday 21 June 2013 | 06:05

மொழிமாற்று இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் ஜெயம் ராஜா. இவர் அறிமுகமான ஜெயம் படத்தில் இருந்து கடையாக இயக்கிய வேலாயுதம் படம் வரை அனைத்துப் படங்களும் ரீமேக் படங்களே.
இவை அனைத்தும் தெலுங்கில் ஹிட் அடித்த படங்கள். அதில் பெரும்பாலான படங்களை தம்பியை வைத்து இயக்கி இருந்தார். ஒரே ஒரு படத்தில் மட்டும் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ராஜா மீண்டும் ஒரு புதிய படத்தில் தம்பியுடன் இணைகிறார். கடைசியாக 2010ல் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி கூட்டணியில் தில்லாலங்கடி திரைப்படம் வெளியானது.

சுமார் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி கைகோர்க்க இருக்கிறது. இதற்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்த ஜெயம் ராஜா அதனை தம்பி ஜெயம் ரவியிடம் கூறி ஓ.கே.வாங்கி விட்டாராம். இதில் ஜெயரம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment