Home » » நோட்டுப் புத்தகம் வழங்கல்

நோட்டுப் புத்தகம் வழங்கல்

Written By Unknown on Wednesday, 19 June 2013 | 21:47

 திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
 மக்கள் நல மன்றத் தலைவர் ஜி. அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்றத்தின் கெüரவ ஆலோசகர் சக்திவேல், துணைத் தலைவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார்.
    முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.கே. ராஜேந்திரன், சிவிக் எக்ஸ்னோராவின் முன்னாள் தலைவர் வி. சண்முகசுந்தரம்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு,  600 பேருக்கு நோட்டுப் புத்தகங்களையும்,   10, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு   பரிசுகளையும் வழங்கினர்.
  திருநகர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கி. இந்திராகாந்தி, காங்கிரஸ்  மாநிலச் செயலர் ஏ.எஸ்.பி. சிவசுந்தரம்,  கவுன்சிலர் நாகலெட்சுமி பாண்டுரெங்கன், ஹார்விபட்டி காங்கிரஸ் தலைவர் ஆர். ரெங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மன்றத்தின் துணைச் செயலர் எஸ். மோகன்தாஸ் காந்தி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment