Home » » 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற விரகனூர் அரசு பள்ளிக்கு பாராட்டு

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற விரகனூர் அரசு பள்ளிக்கு பாராட்டு

Written By Unknown on Tuesday 4 June 2013 | 07:25

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற விரகனூர் அரசு பள்ளிக்கு பாராட்டு
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விரகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
   விரகனூர் அரசு நடுநிலைப் பள்ளி, கடந்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2012-13 ஆம் கல்வி ஆண்டில் 6 மாணவிகள்  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில், மாணவிகள் மங்களவள்ளி - 472, முத்துலெட்சுமி - 468, காசிமீனாட்சி - 454 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
   மேலும், இதில் சமூக அறிவியலில் 3 மாணவிகளும், கணிதத்தில் ஒரு மாணவியும்  100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மாணவிகள் அனைவரையும், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அ. ராமகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயமீனா தேவி, பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பழனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.

0 comments:

Post a Comment