Home » » பள்ளி செல்லும் பிரபல நாயகி

பள்ளி செல்லும் பிரபல நாயகி

Written By Unknown on Friday, 21 June 2013 | 21:16

கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். அறிமுகமான படத்தையும் சேர்த்து இதுவரை இவர் நடித்த மூன்று படங்களும் வெற்றிப் படங்களே. இதன்மூலம் ஹாட்ரிக் நாயகியாகி இருக்கிறார் லட்சுமிமேனன்.
மேலும் சிப்பாய், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா, மஞ்சப்பை, வசந்தகுமாரன் உட்பட மொத்தம் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் ஜூன் பத்தாம் தேதி முதல் தனது +1 படிப்புக்காக பள்ளிக் கூடம் சென்று வருகிறார். இவர் தற்போது +1 சேர்ந்திருப்பது கேரள மாநிலம் கொச்சியில் உள்ள செயிண்ட் இசபெல் மெட்ரிக் பள்ளி. நடப்பு கல்வியாண்டில் முதல் 20 நாட்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சொல்லிவிட்டதால் அதை மதித்து பள்ளிக்கு சென்று வருகிறார். அதன்பிறகு படங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்ளலாமாம்!

சினிமாவுல பெரிய நாயகியாகிவிட்ட பிறகு பள்ளிக்கூடம் எதற்கு என லட்சுமிமேனனிடம் கேட்டதற்கு, சினிமா எப்பவும் நிரந்தரம் கிடையாது. கல்வி மட்டும்தான் நிரந்தர வேலைவாய்ப்பை கொடுக்கும் என்று கூறுகிறார். இன்னும் ரெண்டு வருஷத்துல என் மார்க்கெட் சுத்தமா இறங்கிருச்சுன்னா நான் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க முடியாது. அப்ப கல்லூரிக்கு போகலாம் இல்லையா? என சூப்பராக ஒரு பதிலை சொன்னால் லட்சுமிமேனன்.

0 comments:

Post a Comment