Home » » மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நேர்த்திகடன்

மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நேர்த்திகடன்

Written By Unknown on Wednesday 19 June 2013 | 21:39

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன்  கோயில் வைகாசி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும்.
  இக்கோயிலின் வைகாசிப் பெருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.   தினமும், அம்மன் திருத்தேரில் வீதிகளில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
      அப்போது பக்தர்கள் அலகு குத்தியும், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை படுக்க வைத்தும், மண் பானையில் கரும்புள்ளி குத்தி ஆயிரங்கண் பானையாக்கியும், மண் உருவங்களில் பொம்மைகள் செய்தும் ரத வீதிகளை வலம் வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
 செவ்வாய்க்கிழமை காலை முதல் அக்னிச் சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
      மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.  இதையடுத்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான போலீர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

       திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படும் பூக்குழி இறங்கும் வைபவம் புதன்கிழமை மாலையில் சோழவந்தான் பஸ் நிலையம் அருகே நடைபெறுகிறது

0 comments:

Post a Comment