Home » » போலி ஏ.டி.எம்: கோவையை சேர்ந்த 5 பேர் கைது ?

போலி ஏ.டி.எம்: கோவையை சேர்ந்த 5 பேர் கைது ?

Written By Unknown on Friday 7 June 2013 | 20:26

 போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணம் மோசடி செய்த வழக்கில் கோவையை சேர்ந்த மேலும் 5 பேர்களை கியூ பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். இன்னும் சில நாட்களில் இதில் 100 பேர்வரை சேர்க்க அவர்கள் திட்டம் வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மதுரையில் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து கும்பல் ஒன்று பணம் எடுத்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த மே.மாதம் 25.ம் தேதி மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த பாலாஜி, பாலமுருகன்,சுரேஷ்பாண்டி,மதனமீரான்,முத்துக்குமார் மற்றும் கோவையை சேர்ந்த ஹபீப்ரகுமான் ஆகிய 6 பேர்களை மதுரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.இவ்வழக்கில் முக்கிய குற்ற வாளியான பாலாஜி(28), ஹபீப் ரகுமான்(41)ஆகிய இருவரையும் கியூ பிரிவு போலீசார் 5 நாள் காவலில் வைத்து விசாரித்து 4.ம் தேதி மீண்டும் சிறையில் அடைத்தனர்.கோவையை சேர்ந்த ஹபீப்ரகுமான் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவ்வழக்கில் கோயமுத்தூர் சாயிபாபா காலணியை சேர்ந்த சீனிவாசன்(எ)சீனி(23),விவேகானந்தன்(25), மணிகண் டன்(21),நடராஜன்(24),சித்திரைசெல்வன்(20) ஆகிய 5 பேர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 101 போலி ஏ.டி.எம் கார்டுகள்,ரூ.1.40 லட்சம் பணம்,ரூ.1 லட்சம் மதிப்புள்ள வங்கி வைப்பு பத்திரம்-2 ஆகியவைகள் போலீசாரால் கைபற்றப்பட்டது.   

இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் தெரிவிக்கையில்:இவ்வழக்கில் பாலாஜி தலைமையில் மதுரையிலும்,ஹபீப்ரகுமான் தலைமையில் கோவையிலும் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணம் மோசடி செய்துள்ளனர்.ஹபீப்ரகுமான் கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்போது கோவையை சேர்ந்த 5 பேர்களை கைது செய்துள்ளோம்.கைது செய்யப்பட்ட சீனிவாசன்(எ)சீனி பி.எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு கணினி பொறியாளராக இருந்துள்ளார்.ஹபீப்ரகுமானின் கணினி பழுது பார்த்தபோது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக ஏ.டி.எம் மோசடி குறித்து சீனிவாசனுக்கு ஹபீப்ரகுமான் தெரிவித்துள்ளார் என்றார்.நல்ல வேலையாக இவர்களை தற்போது கைது செய்துவிட்டோம்.இல்லை எனில் இவர்கள் இந்த மோசடியில் மேலும் பலரை(சுமார் 100 பேர் வரை)சேர்த்திருக்க கூடும் என்றார்.மேலும் இவ்வழக்கில் திருச்சி,சென்னையை மையமாக வைத்து இயங்கி கொண்டிருக்கும் மேலும் 5 பேர்களை தேடி வருகின்றோம்.முக்கிய குற்றவாளிகளான கனடாவை சேர்ந்த சுனில்,முகுந்தன் ஆகிய இருவரையும் விரைவில் பிடிக்கும் பட்சத்தில் மேலும் இதில் யார் யாரெல்லாம் தொடர்புடையவர்களை என தெரியவரும் என்றார்.

0 comments:

Post a Comment