Home » » ஈஷாவின் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம் !

ஈஷாவின் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம் !

Written By Unknown on Friday 7 June 2013 | 20:28

ஈஷா யோக மையத்தின் பசுமைக் கரங்கள் திட்டத்தின்கீழ் 40 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மதுரையில் புதன்கிழமை துவங்கப்பட்டது.
 உலக சுற்றுச்சூழல் தினத்தின் ஒரு பகுதியாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஈஷாவுடன் எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்தின.
 இந்த (2013) ஆண்டுக்கான மரம் நடும் திட்டத்தில் 40 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 மரம் நடுவதன் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கத்துடன், பசுமைக் கரங்கள் திட்டத்தை ஈஷா யோக மையம் தொடங்கியது.
 இதன்படி, இதுவரை 1.7 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 2006 ஆம் ஆண்டில் மூன்று நாளில் 2.5 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு 8.56 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 நடப்பு ஆண்டுக்கான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்கமாக, மதுரை அரசு அருங்காட்சியகத்தில் மாநகராட்சி துணை ஆணையர் தேவதாஸ் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். பின்னர், ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

0 comments:

Post a Comment